Tuesday 17 July 2012

கடலூர் யாத்திரை


க்ஷத்ரியன் இதழ் தொகுப்பை போலவே 'வீரபாரதி' இதழ் தொகுப்பை கொண்டு வர திட்டமிட்டிருக்கிறேன். வீரபாரதி என்பது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்காக ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா அவர்களால் 1931  ஆம் ஆண்டு வாரம் மும்முறை நடத்தப்பட்ட பத்திரிக்கை. இந்திய விடுதலை போராட்டத்திற்காக நடத்தப்பட்ட இதழ் என்பதால் வெள்ளைக்கார அரசு இதனை தடை செய்து விட்டது. வீரபாரதி இதழில் வெளியான சில செய்திகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இந்திய நாடாளுமன்றத்தில் வாசித்து, அச்சு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து அதன் மூலம் வீரபாரதி தடை செய்யபட்டிருக் கிறது. இதனை 1950  களில் வெளிவந்த தமிழ் மன்னன் இதழ்களில் வர்மா கூறியிருக்கிறார்.

வீரபாரதி இதழ் தொகுப்பை வெளியிடுவதற்கு ஆதரவு கேட்டு கடந்த மே 2012  இறுதியில் எனது மாப்பிள்ளை ஸ்ரீ விஜய் கண்டரை அழைத்து கொண்டு மகிழுந்தில் கடலூர் சென்றேன்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. பி. ஆர். எஸ். வெங்கடேசன், கடலூர் மாவட்ட பா ம  க செயலாளர் வடகுத்து திரு. ஜெகன், இளம் துறவி திரு. விஜயகுமார் சுவாமிகள், வன்னியர் நல ஊழியர் திரு. கு. சாமி கச்சிராயர், பத்திரிகையாளர் திரு. இளையராஜா பூபதியார் ஆகியோரை சந்தித்தேன்.   

   கடலூர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. பி. ஆர். எஸ். வெங்கடேசன் அவர்களுடன் நான்...     


 கடலூர் மாவட்ட பா ம  க செயலாளர் வடகுத்து திரு. ஜெகன் அவர்களுடன் நான்...

                     அருள் திரு. விஜயகுமார் சுவாமிகளுடன் ஸ்ரீ விஜய் கண்டரும் நானும்... 

          தியாகவல்லி திரு. கு. சாமி கச்சிராயர் அவர்கள் - கண்கொடுத்த நாச்சியப்ப கச்சிராயர் திருகோயில், நொச்சி காடு. 


பத்திரிகையாளர் திரு. இளையராஜா பூபதியார் அவர்கள்.  

 நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு வார்த்தைகளை பெற்று கொண்டு வரலாற்று ஆய்வு பணிகளை தொடங்கி விட்டேன். 

கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் பூண்டியாங் குப்பத்தில் கட்டப்பட்டுள்ள ராமச்சந்திர படையாட்சி தர்ம சத்திரத்தை பலமுறை பார்த்திருந்தாலும் இப்போது தான் படம் எடுத்தேன். ராமச்சந்திர படையாட்சியார் கடலூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பி. ஆர். எஸ். வெங்கடேசன் அவர்களின் முன்னோர்களில் ஒருவர்.  1942  லேயே தர்ம சத்திரம் கட்டி மற்றவர்களுக்கு உணவளிக்கும் நிலையில்  அவர்கள் இருந்துள்ளனர்.    


 ராமச்சந்திர படையாட்சியார் தர்ம சத்திரம்.


            தர்ம சத்திர கல்வெட்டு.                              
 

இதையடுத்து உறவினர் திரு. சாமி கச்சிராயர் அவர்களுடன் தியாகவல்லி சென்றோம். முகாசா பரூரை போலவே கச்சிராயர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டது தியாகவல்லி தீவு. "பூபதியார்" மற்றும் "வர்மராயர்" பட்டம் கொண்ட வன்னியர்களும் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

தியாகவல்லி அருகே நடுத்திட்டில் கச்சிராயர்களின் அரண்மனை ஒன்று பெருமளவு சிதிலம் அடைந்து விட்ட நிலையில் முகப்பின் ஒரு பகுதி மட்டும் அழகுடன் காட்சி அளிக்கிறது. திண்ணையில் பல்லக்கு ஒன்று வைக்கப்பட்டுள்ளது.  

 கச்சிராயர்களின் அரண்மனை - நடுத்திட்டு

  கச்சிராயர்களின் அரண்மனை - நடுத்திட்டு

  அரண்மனை கதவு


 பல்லக்கின் முன்பு நான்

  பல்லக்கின் முன்பு  ஸ்ரீ விஜய் கண்டரும் சாமி கச்சிராயரும்.


 பல்லக்கு 

  பல்லக்கு

முகாசா பரூரில் கோலோச்சி வரும் கச்சிராயர்களும் தியாகவல்லி கச்சிராயர்களும் ஒரே வகையறா தான். தியாகவல்லி, நொச்சி காடு, நடுத்திட்டு, திருச்சோபுரம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய தீவு தான் தியாகவல்லி. இந்த ஊர் சங்க காலம் தொட்டு பழமையானது என்பதற்கும்  துறைமுக பட்டினமாக இருந்திருகிறது என்பதற்கும் சான்றுகள் உள்ளன.          

 தியாகவல்லியில் 1992  ஆம் ஆண்டு திறக்கப்பட்ட வன்னியர் சங்க கட்டிடம். 




ஒரு புறம் கடலும் மூன்று புறமும் உப்பனாறும் சூழ்ந்துள்ள இப்பகுதியை பிச்சாவரம், தீவு கோட்டை போன்ற பகுதிகளுடன் ஒப்பிடலாம். எதிரிகளால் சுலபமாக ஊடுருவ முடியாத இப்பகுதியை கச்சிராயர்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர்.

தியாகவல்லியை சுற்றி உள்ள உப்பனாற்றின் நீர் மட்டம் நிலையாக இருக்காது. இப்பகுதியில் தில்லை காடுகள் எனப்படும் ஒரு வகை மாங்க்ரோவ் காடுகள் அடர்ந்து காணப்படுகின்றன. இக்காட்டின் நடுவே நள்ளிரவில் எங்களை வேட்டைக்கு அழைத்து சென்றார் சாமி கச்சிராயர்.   

 தில்லை செடி எனப்படும் ஒரு வகை மாங்க்ரோவ் தாவரம். ஒரு காலத்தில் சிதம்பரம் முழுவதும் தில்லை செடிகள் இருந்துள்ளன. அதனால் தான் இறைவன் தில்லை நாயகன் என்றும் இறைவி தில்லை நாயகி என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றனர். 

தில்லை காட்டில் நள்ளிரவில் வேட்டை பயணம்

'வேட்டை தலைவர்' திரு. கு. சாமி கச்சிராயர்  அவர்கள் 

ஒருவகையான ஜெல்லி உயிரினங்கள் சேறெங்கும் சிதறி கிடக்கின்றன.

காட்டு சமையல் - வேட்டை விருந்து 


இந்த வேட்டை பயணத்தை வீடியோ எடுத்திருந்தால் சத்தியமாக டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சி தான். சுமார் மூன்று மணி நேரம் தில்லை காடுகளின் நடுவே சேற்றிலும் கழுத்தளவு நீரிலும் நடந்தோம். 
    

வேட்டையில் சிக்கிய கடல்வாழ் உயிரினங்களை கச்சிராயர் ஐந்தே நிமிடத்தில் சுட்டு தந்தார். கருப்பும் ஓர் அழகு, காந்தலும் ஓர் சுவையல்லவா!

நன்றி கச்சிராயரே!

சிலிர்ப்பூட்டும் இந்த நள்ளிரவு நடைபயணத்திற்கும் உங்கள் அன்பிற்கும்...